/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை
/
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை
பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை
ADDED : ஜன 24, 2024 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2023- - 24ம் கல்வியாண்டில், 6- - 18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.