/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்து இயக்கம்
/
கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்து இயக்கம்
ADDED : ஜன 17, 2025 09:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பொங்கல் பண்டிகையை முடித்த பயணியர், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பி செல்ல வசதியாக, ஜன., 17 முதல் 19 வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணியர் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, பயணத்தை முன்னதாக திட்டமிட்டு, சிறப்பு பேருந்து இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்பும் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.