/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தங்க தேரில் ஆதிசங்கரர் வீதியுலா
/
தங்க தேரில் ஆதிசங்கரர் வீதியுலா
ADDED : மே 03, 2025 01:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தி மகோத்சவம் கடந்த மாதம் 28ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. உத்சவத்தையொட்டி, தினமும் காலையில் ஆவஹாந்தி ஹோமம், சிறப்பு அபிஷேகம், மஹாதீபாராதனைகளும் நடந்தது. மாலையில் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு ஆதிசங்கரரின் விக்ரஹம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தியை உத்சவமான நேற்று காலை, காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஹோமம், வேத விற்பன்னர்களின் வேதபாராயணம் உள்ளிட்டவை நடந்தது..
காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், பிருந்தாவனத்தில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மஹா ஸ்வாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தில் சிறப்பு தீபாராதனை நடத்தினர்.
இரவு, தங்க தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளிய ஆதிசங்கரர் ராஜவீதிகளில் பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிப்டடனர். உத்சவத்திற்கான ஏற்பாட்டை சங்கர மடத்தின் செயலர் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, மேலாளர் ந.சுந்தரேச ஐயர் ஆகியோர் செய்திருந்தனர்.