/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அறிவிப்பு பலகையை மறைத்து விளம்பர பேனர் குன்றத்துார் சாலையில் வாகன ஓட்டிகள் குழப்பம்

ADDED : ஆக 28, 2025 01:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, குன்றத்துார் செல்லும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை மறைத்து கட்டப்பட்டுள்ள தனியார் வீட்டுமனை விற்பனை பேனர்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, பிள்ளைபாக்கம் சிப்காட் வழியாக குன்றத்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. சென்னை --- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இந்த முக்கிய சாலையில், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட சிப்காட் பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், நெடுஞ்சாலைத் துறை மற்றும் பிள்ளைபாக்கம் சிப்காட் சார்பாக, வாகன ஓட்டிகளுக்கு வழிக்காட்டும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள், சாலையோரம் உள்ள அறிவிப்பு பலகைகளை மறைத்து, தங்களின் வீட்டு மனை விற்பனை குறித்தான விளம்பர பேனர்களை கட்டியுள்ளனர்.
இதனால், புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். அறிவிப்பு பலகையை மறைத்து கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், இடம் தெரியாமல் தவறுதலாக வேறு இடத்திற்கு செல்கின்றனர்.
எனவே, சாலையோரம் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில் கட்டப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.