/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுகாதார மேம்பாடு குறித்து ஆலோசனை
/
சுகாதார மேம்பாடு குறித்து ஆலோசனை
ADDED : செப் 18, 2025 11:03 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், சுகாதாரத் துறை சார்பில் நடந்த மாவட்ட சுகாதார பேரவை நிகழ்ச்சியில் மருத்துவ உபகரணங்கள், வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சுகாதாரத் துறையில், கிராம மற்றும் நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் தேவைப்படும் வசதிகளும், மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ உபகரணங்கள் பற்றி, மக்கள் பிரதிநிதிகளுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து தீர்வு காண, சுகாதார பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இதில், இணை இயக்குநர் ஹிலாரினா ஜோசிட்டா நளினி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில், தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், ஒன்றியக் குழு தலைவர் மலர்க்கொடி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள், வசதி பற்றி ஆலோசிக்கப்பட்டது. தடுப்பூசி பாதுகாத்து வைக்கக்கூடிய குளிர்சாதன கருவிகள், டிஜிட்டல் எக்ஸ் - ரே, புதிய தடுப்பூசி வாகனம், நடமாடும் பல் மருத்துவ சிகிச்சை வாகனங்கள், சுற்றுச்சுவர், கட்டட சீரமைப்பு, புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து, மாநில சுகாதார பேரவைக்கு பரிந்துரைத்து அனுப்பப்பட்டுள்ளன.