/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீடுகள் கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுரை
/
வீடுகள் கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுரை
வீடுகள் கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுரை
வீடுகள் கட்டும் திட்டத்தை விரைந்து முடிக்க அறிவுரை
ADDED : அக் 28, 2025 10:28 PM
காஞ்சிபுரம்: கனவு இல்லம் திட்டத்தில் பணிகளை விரைந்து முடிக்க, வீடு கட்டும் பயனாளிகள் மற்றும் வீடு கட்ட உதவுவோருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், கனவு இல்ல திட்டத்தின் கீழ், 66 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமளா, தாணுராஜ் மற்றும் பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று, பயனாளிகளிடம் கலந்துரையாடினர்.
குறிப்பாக, தொய்வு இன்றி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வீடு கட்ட உதவுவோரிடம் கேட்டுக் கொண்டனர்.
மேலும், புதிய குடியிருப்புகளுக்கு, மின் கம்பங்கள், குடிநீர் இணைப்பு வழங்கவும், ஊராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.