/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்த வார்டு சபையில் மனு
/
சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்த வார்டு சபையில் மனு
ADDED : அக் 28, 2025 10:27 PM
காஞ்சிபுரம்: சாலை, குடிநீர் தொட்டி வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வார்டு சபை கூட்டத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன.
வாலாஜாபாத் வட்டார, அரசு அலுவலக ஓய்வூதியதாரர் சங்க கட்டடத்தில் நேற்று, 10வது வார்டு சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, அந்த வார்டு ம.தி.மு.க., கவுன்சிலர் சிவசங்கரி தலைமை வகித்தார்.
வாலாஜாபாத் பேரூராட்சி துாய்மை பணி மேற்பார்வையாளர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பத்தாவது வார்டில் இருந்து, சாலை, குடிநீர் தொட்டி, கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டன.
இதுதவிர, கொசு மருந்து தெளிக்க வேண்டும். புகை மருந்து அடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.
இதேபோல, 7, 9 ஆகிய வார்டுகளில் வார்டு சபை கூட்டங்கள் நடந்தன.

