/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் தேர்தல் விதிகளை பின்பற்ற அச்சகம், கேபிள் டிவியினருக்கு அறிவுரை
/
காஞ்சியில் தேர்தல் விதிகளை பின்பற்ற அச்சகம், கேபிள் டிவியினருக்கு அறிவுரை
காஞ்சியில் தேர்தல் விதிகளை பின்பற்ற அச்சகம், கேபிள் டிவியினருக்கு அறிவுரை
காஞ்சியில் தேர்தல் விதிகளை பின்பற்ற அச்சகம், கேபிள் டிவியினருக்கு அறிவுரை
ADDED : மார் 19, 2024 09:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, திருமண மண்டப உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் அச்சடிப்போர், கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள், உணவகம், அச்சகம், அடகு தொழில் புரிவோர், தங்கும் விடுதி நடத்துவோர் பங்கேற்ற தேர்தல் விதிமுறை பற்றிய கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தேர்தல் விதிமுறைகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:
தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மட்டுமே கேபிள் டிவியில் ஒளிபரப்ப வேண்டும். அரசியல் கட்சிகளின் ஊர்வலம், பொதுக்கூட்டம் போன்றவை அனுமதியின்றி ஒளிபரப்பக் கூடாது. திருமண மண்டபங்கள், விடுதி, கூட்டரங்க உரிமையாளர்கள், வெளியூர்வாசிகள் கூட்டமாக வந்து தங்க அனுமதிக்கக் கூடாது.
அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு, டோக்கன், அடையாள வில்லைகள் போன்றவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பொதுமக்கள் கொண்டு வருவதை, எந்தவொரு உரிமையாளரும் ஏற்கக்கூடாது.
தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டி, துண்டு பிரசுரம் ஆகியவை அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் போன்ற விபரங்களும், எத்தனை எண்ணிக்கை போன்ற விபரங்களும் இடம் பெற வேண்டும். தேர்தல் விதிமுறைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

