/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சரியான அஞ்சல் குறியீடு பயன்படுத்த அறிவுரை
/
சரியான அஞ்சல் குறியீடு பயன்படுத்த அறிவுரை
ADDED : செப் 27, 2024 07:35 PM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, ஒரகடத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம், 31ம் தேதி முதல் ஒரகடம் துணை அஞ்சல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அஞ்சல் கட்டுப்பாட்டில், மாத்துார், காரணைத்தாங்கல், சென்னக்குப்பம், வைப்பூர் - அ, வைப்பூர் - -ஆ, வடகால், வல்லம், வல்லக்கோட்டை, எறையூர், எறையூர் மோட்டூர் , ஒரகடம் ஆகிய கிராமங்களுக்கு அஞ்சல் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கிராமத்தை சுற்றியுள்ளவர்கள், 602 118 என்கிற அஞ்சல் குறியீட்டு எண்ணுக்கு பதிலாக, 602 105 எண்ணை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
எனவே, ஒரகடம் பகுதியை சுற்றியுள்ள கிராமத்தினர், 602 118 என்கிற ஒரகடம் அஞ்சல் குறியீட்டு எண்ணை பயன்படுத்தலாம் என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்தார்.