/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்
/
புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்
புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்
புதருக்குள் வேகவதி ஆற்று கால்வாய் தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலம்
ADDED : டிச 14, 2024 11:41 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்கதிர்பூர் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி மழைநீர், விப்பேடு ஊராட்சி குண்டுகுளம் மூவேந்தர் நகர் எதிரில், திருப்பருத்திகுன்றம் ஏரிக்கும், வேகவதி ஆற்றுக்கும் செல்லும் வகையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குண்டு குளம் மூவேந்தர் நகர் எதிரே, வேகவதி ஆற்றுக்குமழைநீர் செல்லும்கால்வாயில் செடி,கொடிகள் மண்டியுள்ளதால், கால்வாய் வாயிலாக வேகவதி ஆற்றுக்குசெல்லும் மழைநீர், கீழ்கதிர்பூரில் உள்ள விவசாயநிலங்களில் புகுந்து, நெல் நாற்று நடவு செய்துள்ள விவசாயநிலத்தை மூழ்கடித்துள்ளது.
எனவே, குண்டுகுளம் மூவேந்தர் நகரில் எதிரில் வேகவதி ஆற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாயில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை முழுமையாகதுார்வாரி சீரமைக்க வேண்டும் என, கீழ்கதிர்பூர்விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.