/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேடப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.92 கோடிக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை
/
வேடப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.92 கோடிக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை
வேடப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.92 கோடிக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை
வேடப்பாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.92 கோடிக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை
ADDED : நவ 28, 2024 11:44 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூர்- - வந்தவாசி நெடுஞ்சாலை, வேடப்பாளையத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு, உத்திரமேரூர், பெருநகர், மானாம்பதி, திருமுக்கூடல், அரசாணிமங்கலம், சாலவாக்கம் உட்பட 50க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து, விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல், வேர்க்கடலை, தேங்காய், புடலங்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகிய விளைபொருட்கள், மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக, பரிவர்த்தனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி, நேற்று வரை 775 விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விளைபொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதில், நெல் 15,37,000 கிலோ, தேங்காய் 3,300 கிலோ, வேர்க்கடலை 540 கிலோ, புடலங்காய் 380 கிலோ, கத்தரிக்காய் 200 கிலோ, வெண்டைக்காய் 240 கிலோ அளவிலான விளைபொருட்கள், 2 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனைகூட மேற்பார்வையாளர் யுவராஜ் கூறியதாவது:
ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து விவசாயிகள் வந்து, விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். வெளிச்சந்தைகளில் விற்பனை செய்யும் விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து, மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து லாபம் பெறலாம்.
இங்கு, விளைபொருட்களை சேமித்து வைக்கவும், தேவையான கிடங்கு வசதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
வெளிச்சந்தைகளைவிட,ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறது.
விளைபொருட்கள் மழையில் நனையாதபடிக்கு பாதுகாப்பாக வைக்க,போதிய இடவசதி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.