/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் வட்டாரத்தில் விவசாய பணிகள் தீவிரம்
/
காஞ்சிபுரம் வட்டாரத்தில் விவசாய பணிகள் தீவிரம்
ADDED : டிச 05, 2024 01:53 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆறு, ஏரி மற்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தி சொர்ணவாரி, சம்பா, நவரை உள்ளிட்ட பருவத்தில், ஏ.டி.டி., - 36, ஐ.ஆர்., - 50, கோ - 43, கோ - 51, குண்டு, வெள்ளை பொன்னி உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
வடகிழக்கு பருவ மழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.
இதனால், மகிழ்ச்சி அடைந்துள்ள காஞ்சிபுரம்வட்டார விவசாயிகள், நவரை பருவத்திற்கான ஏ.டி.டி., - 36, ஏ.டி.டி., - 39, கோ - 43, ஏ.எஸ்.டி., - 16, ஐ.ஆர்., - 64 உள்ளிட்ட நெல் ரகங்கள் நடவு செய்வதற்கான பணியை துவக்கி உள்ளனர்.
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கீழம்பி, முசரவாக்கம், கீழ்கதிர்பூர், மேல் கதிர்பூர் உள்ளிட்ட கிராம விவசாயிகள், நெல் நாற்று நடவு செய்வதற்காக உழவு மாடுகளை வைத்து பரம்பு ஓட்டுதல், நாற்று விடுதல் உள்ளிட்ட விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.