/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை
/
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; வேளாண் அதிகாரி ஆலோசனை
ADDED : டிச 03, 2024 04:27 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியத்தில் மருதம், வயலக்காவூர், திருப்புலிவனம், சாலவாக்கம், திருமுக்கூடல் உட்பட 73 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில், 2,500 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சம்பா முன்பருவ நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது, நெற்பயிர் வளர்ந்து கதிர் விட்டு உள்ளது. இந்நிலையில், 'பெஞ்சல்' புயலால், மூன்று நாட்களாக கடும் மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறுபகுதிகளில், மழைநீர் வடிகால் வசதி இல்லாத, 222 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் மழைநீரில்மூழ்கின.
தொடர்ந்து திருமுக்கூடல், வயலக்காவூர் ஆகிய பகுதிகளில், மழைநீரில் மூழ்கிய பயிர்களை வேளாண் இணை இயக்குனர் முருகன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அப்போது, தாழ்வான மற்றும் வடிகால் வசதி இல்லாத இடங்களில் உள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி, அதிகாரிகளும், விவசாயிகளும் உடனிருந்தனர்.