/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆமதாபாத் விமான விபத்து அஞ்சல் துறை அஞ்சலி
/
ஆமதாபாத் விமான விபத்து அஞ்சல் துறை அஞ்சலி
ADDED : ஜூன் 14, 2025 01:05 AM

காஞ்சிபுரம்:ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களுக்கு காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர், இரண்டு விமானிகள், 10 விமான பணியாளர்கள் என, மொத்தம் 242 பேருடன் ஏர் இந்தியாவிற்கு சொந்தமான போயிங் 787 ரக ட்ரீம் லைனர் இரட்டை இன்ஜின் விமானம் நேற்று முன்தினம் மதியம், 1:38 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதில், மேகினி நகரில் உள்ள பி.ஜே., மருத்துவக்கல்லுாரி விடுதி மீது, விமானத்தின் முன் பகுதி மோதியதில், ஒரே ஒரு பயணி தவிர அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தில், அஞ்சல் துறை ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.