/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
ADDED : ஆக 01, 2025 12:43 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில் உள்ள பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாமில் கோரிக்கை மனு அளித்தார்.
மனு விபரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டில் அதிகரித்து வரும், பாதாள சாக்கடை அடைப்பு சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி மேயர், கமிஷனரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவொரு நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், திருவள்ளுவர் தெரு, யதோக்தகாரி மாட வீதி, நேதாஜி தெரு, வீரவாஞ்சிநாதன் தெரு, லாலா குட்டை தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, வரதராஜபுரம் பின் தெரு, நேதாஜி நகர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை உள்ளது.
எனவே, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் மூலம் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து, எங்கள் பகுதி மக்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.