/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
/
ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., கவுன்சிலர் மனு
ADDED : ஜன 28, 2025 07:44 PM
காஞ்சிபுரம்:ஒப்பந்தம் பதிவு செய்வதற்கு முன்பே, டெண்டரில் முறைகேடாக பங்கேற்று ஒப்பந்த பணி எடுத்தவரின், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டரிடம். அ.தி.மு.க., கவுன்சிலர் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் அரிகுமார் அளித்த மனுவில் கூறியதாவது:
வாலாஜாபாத் பேரூராட்சி சாதாரண கூட்டம். டிச., 13ல் நடந்தது. இந்த கூட்டத்தில், பொருள் எண்: 14ல். அருண்குமார் என்பவர் பேரூராட்சி ஒப்பந்ததாரராக பதிவு செய்வதற்கு, கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
அதே கூட்டத்தின் பொருள் எண்: 21ன்படி, நவ., 15ம் தேதி நடந்த மின்னணு ஒப்பந்தத்தில் பங்கேற்று, சில பணிகளுக்கான டெண்டரை எடுத்துள்ளார். ஒப்பந்ததாரராக பதிவு செய்வதற்கு முன்பே, டெண்டரில் எப்படி பங்கேற்க முடியும். பேரூராட்சி செயல் அலுவலர் எப்படி பணி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
பணி ஒப்பந்தம் எடுத்தவர், பெரியார் நகர் பகுதியில் தரமற்ற கான்கிரீட் சிறுபாலம் கட்டி வருகிறார். செயல் அலுவலரின் ஆய்வில், தேவையற்ற இடங்களில் கட்டுமான பணிகள் செய்ய வேண்டாம் என, கட்டுமான பணிகளை நிறுத்த அறிவுரை வழங்கி உள்ளார். எனவே, விதிகளை மீறி செயல்படும் ஒப்பந்ததாரரின் பணியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.