/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலியல் வன்கொடுமை விவகாரம் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
பாலியல் வன்கொடுமை விவகாரம் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமை விவகாரம் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமை விவகாரம் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 01:40 AM

காஞ்சிரம், சென்னையிலுள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்குள், கடந்த 23ம் தேதி இரவு உணவுக்கு பின், மாணவி ஒருவர் மாணவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மாணவரை விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இது தொடர்பாக, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம், தமிழகம் முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிச., 25ம் தேதி ஞானசேகரன், 37, என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க., சார்பில், ஏற்கனவே பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம்முழுதும், டிச., 30 ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமிஅறிவித்திருந்தார்.
அதன்படி, 'யார் அந்த சார்?' என்ற போராட்டத்தை, தமிழகம் முழுதும் அ.தி.மு.க., நேற்று நடத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே, மாவட்ட செயலர் சோமசுந்தரம் தலைமையில், அ.தி.மு.க.,வினர் நுாற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். அ.தி.மு.க., வினர், 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, 320 பேரை போலீசார் கைது செய்து, தனியார்திருமண மண்டபத்தில் தங்க வைத்து இரவுவிடுவித்தனர்.