/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து வரும் 17ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து வரும் 17ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து வரும் 17ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து வரும் 17ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 13, 2025 10:19 PM
சென்னை:'உத்திரமேரூர் பேரூராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றி தராததைக் கண்டித்து, வரும் 17ம் தேதி, உத்திரமேரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில், சொத்து வரி, குடிநீர் வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சாலை, குடிநீர், தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள அரசு மருத்துவமனையில், புதிய கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அரசு நேரடி கொள்முதல் நிலையம், சரியான முறையில் செயல்படவில்லை. புறவழிச்சாலை பணி மந்தமாக நடப்பதால், போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத, தி.மு.க., அரசை கண்டித்தும், தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, வரும் 17ம் தேதி காலை 10:00 மணிக்கு, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இதில் கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.