/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி
/
படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி
படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி
படப்பையில் பெண்ணுக்கு லவ் 'டார்ச்சர்' அ.தி.மு.க., பிரமுகருக்கு அடி
ADDED : ஜன 30, 2025 11:56 PM

குன்றத்துார்,காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்தவர் பொன்னம்பலம், 60; அ.தி.மு.க.,வில், குன்றத்துார் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர்.
இவரது வீட்டின் மேல் தளத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், தன் தோழிகளுடன் வாடகைக்கு தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க., பிரமுகர் பொன்னம்பலம், அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி, அடிக்கடி 'லவ் டார்ச்சர்' செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண், வீட்டை காலி செய்து, படப்பையில் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். எனினும், அந்த பெண்ணை விடாமல் தொந்தரவு செய்துவந்துள்ளார்.
இளம்பெண் தங்கியிருந்த வீட்டிற்கும், வேலை செல்லும் போது அவரது பின்னால் சென்றும், மொபைல் போனில் ஆபாசமாகவும், பொன்னம்பலம் பேசி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண், அவரது தோழிகள் சேர்ந்து, நேற்று வீட்டிற்கு வந்த பொன்னம்பலத்தை துடைப்பத்தால் சரமாரியாக தாக்கினர். பின், அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து அந்த பெண், வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன், மணிமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று, அ.தி.மு.க., பிரமுகர் பொன்னம்பலம் மீது புகார் அளித்தார்.
மணிமங்கலம் போலீசார், பொன்னம்பலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.