/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருளில் மூழ்கிய ஆலடி கோவில் தெரு
/
இருளில் மூழ்கிய ஆலடி கோவில் தெரு
ADDED : அக் 30, 2024 09:10 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து, ஓரிக்கை, குருவிமலை, களக்காட்டூர், உத்திரமேரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள், காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கீழ்கேட் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள காமாட்சியம்மன் காலனி, ஜீயர் நாராயணபாளையம் தெரு சந்திப்பில், சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள தெரு மின்விளக்குகள் பழுதடைந்துள்ளதால், அப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழந்து காணப்படுகிறது.
இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தாங்கள் செல்ல வேண்டிய தெருக்களுக்கு திரும்பும்போது இருள் சூழ்ந்துள்ளதால், விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் பழுதடைந்த மின்விளக்குளை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.