/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்
/
அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்
அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்
அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி ஒரு மாதத்தில் முடிக்க திட்டம்
ADDED : ஜூலை 09, 2025 01:23 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதியுள்ள பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், திருக்காலிமேடு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரி, 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது.
மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலையான இந்த ஏரியின் நிலை படுமோசமாக இருந்தது.
ஏரிக்கரைகள் சேதமடைந்து, குப்பை கொட்டியும் பராமரிப்பு இன்றியும் இருந்தது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி, தனியார் தொழிற்சாலை நிறுவனம், தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்த ஏரியை சீரமைக்க முடிவு செய்தன.
ஏரியை சீரமைக்க தனியார் நிறுவனம் தன் தொழிற்சாலை சார்பில், பொக்லைன் இயந்திர வாகனத்தை வழங்கியுள்ளது. இதற்கான டீசல், பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து வந்தது.
இந்த ஏரி சீரமைப்பு பணிகள், கடந்த மார்ச் இறுதியில் துவங்கின. நான்கு மாதங்களாக நடந்த நிலையில், 80 சதவீத சீரமைப்பு பணிகள் முடிவடைந்தன.
பணிகளை, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, தனியார் தொழிற்சாலை நிறுவன நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.