/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பூஜை, பராமரிப்புக்கு நிதியில்லை ஏகாம்பரநாதர் கோவில் குறித்து குற்றச்சாட்டு: ஏகாம்பரநாதர் கோவில் குறித்து குற்றச்சாட்டு

ADDED : ஆக 20, 2025 10:29 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, 5,000 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருந்தும், பூஜை, பராமரிப்பு களுக்கு நிதியில்லை என, முன்னாள் அறங்காவலர் குற்றச்சாட்டு தெரிவித்து, கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார் .
பஞ்ச பூத தலங்களில் மண் தலமாக விளங்கும், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 30 கோடி ரூபாய்க்கு மேலாக செலவிட்டு திருப்பணிகள் நடக்கின்றன.
கோவிலுக்கு வர வேண்டிய நியாயமான வாடகை, வருவாய் இனங்களை கண்டறிந்து அவற்றை வசூலிக்காததால், 200 கோடி ரூபாய்க்கு மேலாக, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, முன்னாள் அறங்காவல் குழு உறுப்பினர் ரகு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :
ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அசையும், அசையா சொத்துக்கள் என, 5,000 கோடி ரூபாய்க்கு மேலாக உள்ளன. இதிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கோவிலுக்கு வர வேண்டும்.
ஆனால், கோவில் நிர்வாகம் நில வாடகை உள்ளிட்ட பல வகையான இனங்களில் இருந்து சரி யாக வசூலிக்காததால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்களை பராமரிப்பதும், நியாய வாடகை வசூலிப்பது போன்ற பணிகளுக்கு இக்கோவிலுக்கு தனியாக செயல் அலுவலர் நியமிக்க வேண்டும்.
கோவில் சொத்துக்களுக்கு வாடகைதாரர்கள் சரிவர வாடகை செலுத்தாததால், பூஜைகளுக்கும், பராமரிப்புகளுக்கும் நிதியில்லாத சூழல் ஏற்படுகிறது.
கோவிலுக்கு கிடைக்க வேண்டிய பாக்கியை வசூலித்து, கோவிலின் அனைத்து பராமரிப்புகளையும் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.