/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாஞ்சிநாதன் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம்
/
வாஞ்சிநாதன் கோவிலில் அம்மையப்பர் திருக்கல்யாணம்
ADDED : ஆக 17, 2024 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் வாழவந்த நாயகி உடனுறை வாஞ்சிநாதன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அம்மையப்பர் திருக்கல்யாண வைபவம் மற்றும் சுவாமி ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது.
பன்னிரு திருமுறை ஓதி நடந்த இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் கல்யாண சீர் வரிசை பொருட்கள் எடுத்துக் கொண்டு அப்பகுதி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதை தொடர்ந்து, மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது விழாவையொட்டி, பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

