/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எலும்பு கூடாக நிற்கும் மின் கம்பம் வட்டம்பாக்கம் சாலையில் அபாயம்
/
எலும்பு கூடாக நிற்கும் மின் கம்பம் வட்டம்பாக்கம் சாலையில் அபாயம்
எலும்பு கூடாக நிற்கும் மின் கம்பம் வட்டம்பாக்கம் சாலையில் அபாயம்
எலும்பு கூடாக நிற்கும் மின் கம்பம் வட்டம்பாக்கம் சாலையில் அபாயம்
ADDED : டிச 16, 2024 02:38 AM

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, வட்டம்பாக்கம் பிரதான சாலையோரம் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வழித்தடம் செல்கிறது.
இதில், சில மின் கம்பங்கள் மோசமான நிலையில் சேதமடைந்து, விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளன. மின் கம்பத்தின் சிமென்ட் பூச்சு முற்றிலும் உதிர்ந்து, இரும்பு கம்பி வெளியில் தெரியும் நிலையில் உள்ளன.
அதுமட்டுமின்றி, எந்த நேரமும் விழும் நிலையில் மின் கம்பம் உள்ளதால், பிரதான சாலையோரம் செல்லும் வாகன ஓட்டிகள், மின் கம்பம் முறிந்து விழுந்து, விபத்தில் சிக்கிவிடுவோமோ எனும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில், சிதிலமடைந்து உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.