/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி நுாற்றாண்டு விழா வளைவு அமைத்த அங்கம்பாக்கம் கிராமத்தினர்
/
பள்ளி நுாற்றாண்டு விழா வளைவு அமைத்த அங்கம்பாக்கம் கிராமத்தினர்
பள்ளி நுாற்றாண்டு விழா வளைவு அமைத்த அங்கம்பாக்கம் கிராமத்தினர்
பள்ளி நுாற்றாண்டு விழா வளைவு அமைத்த அங்கம்பாக்கம் கிராமத்தினர்
ADDED : மார் 22, 2025 12:54 AM

வாலாஜாபாத், லாஜாபாத் அடுத்து, அங்கம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளியில், தற்போது 129 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
கடந்த 1924ம் ஆண்டில் இப்பள்ளி துவங்கப்பட்டது. பள்ளி துவங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, நுாற்றாண்டு விழா மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளியின் நுாற்றாண்டு நினைவாக அக்கிராம வாசிகள் சார்பில், பள்ளிக்கு நுாற்றாண்டு விழா வளைவு (நுழைவாயில் கட்டடம்) தங்களது சொந்த செலவில் அமைக்கப்படுகிறது.
இதற்காக அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கிராமத்தினர் ஒன்றிணைந்து, கட்டுமானப் பொருட்களை வழங்கியும், கட்டடப் பணியாளர்களுக்கான கூலி செலவை ஏற்றும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது,
அங்கம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறை, சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டடம் போன்ற பல்வேறு வசதிகள் அரசு நிதி வாயிலாக நிறைவேற்றி தரப்பட்டுள்ளது.
பள்ளிக்கு நுழைவாயில் போன்ற கூடுதல் வசதிகள், நிதி மேலாண்மை இருப்புக்கு ஏற்ப அமைத்து தரப்படுவது வழக்கம்.
அங்கம்பாக்கம் ஊராட்சியில், கனிமவளம் போன்ற நிதி ஆதாரம் இல்லாததால், நுழைவாயில் கட்டடம் அமைக்க கிராமத்தினர் ஆர்வத்தோடு முன்வந்து அப்பணி மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.