/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊட்டசத்து அவசியம் குறித்து அங்கன்வாடியினர் விழிப்புணர்வு
/
ஊட்டசத்து அவசியம் குறித்து அங்கன்வாடியினர் விழிப்புணர்வு
ஊட்டசத்து அவசியம் குறித்து அங்கன்வாடியினர் விழிப்புணர்வு
ஊட்டசத்து அவசியம் குறித்து அங்கன்வாடியினர் விழிப்புணர்வு
ADDED : செப் 28, 2024 10:48 PM

புள்ளலுார்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், ஊட்டசத்து மாத விழா நடந்தது. இந்த விழாவிற்கு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட படுநெல்லி தொகுதி பொறுப்பாளர் வட்சலா தலைமை வகித்தார்.
வாலாஜாபாத் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.
வளரிளம் பெண்களுக்கு ஊட்டசத்து உணவு மற்றும் சிறு தானிய உணவுகள் சாப்பிடுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. இதில், காய்கறி, சிறுதானிய ஊட்டசத்து உணவுப்பொருட்களின் நன்மை குறித்து காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இதில், படுநெல்லி, கோவிந்தவாடி, புள்ளலுார், ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், வேளியூர், ஊவேரி ஆகிய அங்கன்வாடி மையப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.