/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்கம்
/
அங்கன்வாடி மையம் கட்டுமான பணி துவக்கம்
ADDED : நவ 15, 2025 11:30 PM
உத்திரமேரூர்: ஆண்டித்தாங்காலில், அங்கன்வாடி மையம் கட்டுமான பணி நேற்று துவக்கப்பட்டது.
ஆண்டித்தாங்கல் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது.
பழுதடைந்து இருந்த இக்கட்டடம், இரு ஆண்டுக்கு முன் இடிக்கப்பட்டது. பின், அங்குள்ள, நூலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. நுாலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வி பயில சிரமமாக இருந்து வந்தது. எனவே, புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை கட்ட, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து, 2025 -- 26ம் நிதி ஆண்டில், கனிம வள திட்டத்தின் கீழ், 16.45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய அங்கன்வாடி மையம் கட்டும் பணியின் துவக்க நிகழ்ச்சி, ஊராட்சி தலைவர் சரஸ்வதி தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, அங்கன்வாடி மையம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.

