/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு
/
மேட்டுப்பாளையத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு
ADDED : நவ 14, 2025 10:50 PM
ஸ்ரீபெரும்புதுார்: மேட்டுப்பாளையம் ஊராட்சியில், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட, அங்கன்வாடி மையம் நேற்று திறக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், மேட்டுப்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள, அங்கன்வாடி மையத்தில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் அடைந்து காணப்பட்டது.
இதனால், பழைய அங்கன்வாடி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனார். இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியின் கீழ் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில், புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது.
இதை, ஊராட்சி தலைவர் தேவி நேற்று பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். உடன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

