/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிராம சபை கூட்டம் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு
/
கிராம சபை கூட்டம் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு
கிராம சபை கூட்டம் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு
கிராம சபை கூட்டம் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு
ADDED : நவ 14, 2025 10:50 PM

காஞ்சிபுரம்: கிராம சபையின் முக்கியத்துவம் குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் பேசினார்.
வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாதிரி இளைஞர் கிராம சபை' கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலர் சாந்தி தலைமை வகித்தார்.
தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தமிழக அரசு மாணவர்களுக்கு, உள்ளூர் நிர்வாகம், ஜனநாயக விழிப்புணர்வை மேம்படுத்த பல்வேறு பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வருகிறது. கிராம சபையின் முக்கியத்துவம் குறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்றுநர் அரவிந்தன் மாதிரி இளைஞர் கிராம சபை கூட்டத்தின் பற்றாளராக பங்கேற்றார்.மத்திய, மாநில அரசின் திட்டங்கள், சாலை வசதி, குடிநீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், விவசாய நலன், பள்ளி - ஊராட்சி இணைந்த திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதம் செய்யப்பட்டன.
பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.

