/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
ADDED : பிப் 15, 2025 07:50 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் ஊராட்சியில், அரங்கநாதபுரம் கிராமம் உள்ளது. இங்கு, அரங்கநாதபுரம்-புள்ளலுார் செல்லும் சாலை ஓரத்தில், அங்கன்வாடி மைய கட்டடம் இயங்கி வந்தது.
இந்த கட்டடம் சேதத்தால், அங்கிருந்து அகற்றப்பட்டு உள்ளது. புதிய கட்டடம் கட்ட முயலும் போது, தனி நபர் ஒருவரின் பட்டாவில் அங்கன்வாடி மைய கட்டடம் வருகிறது என, கட்டுமான பணி நிறுத்தப்பட்டு உள்ளது.
இதனால், புதிய அங்கன்வாடி மையக்கட்டடம் கட்டி முடியாமல், மையத்திற்கு வரும் குழந்தைகள் வாடகை கட்டடத்தில் இயக்க வேண்டி உள்ளது. அங்கு, குழந்தைகள் விளையாடும் அளவிற்கு போதிய இடவசதி இல்லை என, குழந்தைகளின் பெற்றோர் புலம்பி வருகின்றனர்.
எனவே, அரங்கநாதபுரத்தில் புதிய அங்கன்வாடி மையத்திற்கு வேறு இடம் தேர்வு செய்து, கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.