/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரத்தில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி
/
பழையசீவரத்தில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி
பழையசீவரத்தில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி
பழையசீவரத்தில் பணி முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி
ADDED : மே 01, 2025 01:05 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழையசீவரம் கிராமம். இக்கிராமத்தில், பெரிய காலனி பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம் பழுதடைந்தது.
இதையடுத்து, அப்பகுதி அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது. இற்காக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு பணி துவங்கியது.
தற்போது பணி நிறைவு பெற்று ஓராண்டாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
புதியதாக கட்டிய அங்கன்வாடி மையத்திற்கு எதிரே உள்ள இடத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அங்கன்வாடி மையத்திற்கு சென்று வர வழி ஏற்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தெரிய வருகிறது.
எனவே, பழையசீவரத்தில் புதிய அங்கன்வாடி மையத்திற்கான கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.