/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி கழிவுநீர் தொட்டி ஓட்டையால் விபத்து அபாயம்
/
அங்கன்வாடி கழிவுநீர் தொட்டி ஓட்டையால் விபத்து அபாயம்
அங்கன்வாடி கழிவுநீர் தொட்டி ஓட்டையால் விபத்து அபாயம்
அங்கன்வாடி கழிவுநீர் தொட்டி ஓட்டையால் விபத்து அபாயம்
ADDED : நவ 30, 2024 12:43 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 5வது வார்டில் வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள வேளாளர் தெருவில், அங்கன்வாடி மையம் இயங்குகிறது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த 20 குழந்தைகள் பயில்கின்றனர்.
இந்த அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்காக கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கழிவுநீர் தொட்டியின் மேல் மூடி உடைந்து காணப்படுகிறது.
இதனால், அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள், விளையாட்டு நேரங்களில், கழிவுநீர் தொட்டி ஓட்டையால் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.
எனவே, இங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கான கழிவுநீர் தொட்டி ஓட்டையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.