/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலிபால் போட்டி இன்று நடப்பதாக அறிவிப்பு
/
வாலிபால் போட்டி இன்று நடப்பதாக அறிவிப்பு
ADDED : அக் 22, 2024 07:40 AM
சென்னை: பெரம்பூரில் நேற்று நடக்க இருந்த 'பிளேஸ்' வாலிபால் போட்டி, மழையால் ஒத்திவைக்கப்பட்டு, இன்று சாந்தோமில் நடக்கிறது.
தமிழகத்தில் முதல் முறையாக, 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டி, சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடக்கின்றன.
இந்த சீசனில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்போர்ட்டு, டான்பாஸ்கோ, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ., - சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன.
'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பள்ளிகளில், போட்டிகள் நடக்கின்றன. தொடர் மழையால், ஒத்திவைக்கப்பட் போட்டிகள், நேற்று, பெரம்பூர் டான்பாஸ்கோ பள்ளியில் நடக்க திட்டமிடப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் இரவு, சில இடங்களில் பெய்த மழையால், போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.
பெரம்பூரில் நடக்க இருந்த 'லீக்' போட்டிகள், இன்று காலை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடக்கின்றன.
இன்றைய ஆட்டங்களில், பெரம்பூர் டான்பாஸ்கோ - மாண்ட்போர்ட், ஆலந்துார் ஏ.ஜே.எஸ்., - செயின்ட் மேரிஸ்; சேதுபாஸ்கரா - செயின்ட் பீட்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.