/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாடற்ற அரசு கட்டடங்களில் சமூக விரோத செயல் அதிகரிப்பு
/
பயன்பாடற்ற அரசு கட்டடங்களில் சமூக விரோத செயல் அதிகரிப்பு
பயன்பாடற்ற அரசு கட்டடங்களில் சமூக விரோத செயல் அதிகரிப்பு
பயன்பாடற்ற அரசு கட்டடங்களில் சமூக விரோத செயல் அதிகரிப்பு
ADDED : பிப் 18, 2025 03:53 AM

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வளர்ந்து வரும் நகர் பகுதியாக வாலாஜாபாத் உள்ளது.
இப்பேரூராட்சியில், கடந்த ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்த பல்வேறு அரசு பொது கட்டடங்கள் பழுதானதையடுத்து அவை கைவிடப்பட்டது.
அக்கட்டடங்களுக்கு மாற்றாக இடமாற்றம் செய்து தற்போது புதிய கட்டடங்கள் அமைத்து செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டதை அடுத்து, ரயில்வே நிலையம் அருகே ஏற்கனவே இருந்த பழைய கட்டடங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.
அப்பகுதியில், வேளாண் துறைக்கான சில கட்டடங்களும் கைவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான கட்டட பகுதிகள், சமீப காலமாக சமூக விரோதிகளின் கூடாரமாக விளங்கி வருவதாக அப்பகுதியை சேர்ந்த பல தரப்பு மக்களும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
மது பிரியர்கள் மட்டுமின்றி, தகாத சில செயல்பாட்டிற்கும் இக்கட்டட மறைவிடங்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து, வாலாஜாபாத் பகுதி வாசிகள் சிலர் கூறியதாவது:
வாலாஜாபாத்தில், பயன்பாடற்ற பழைய பி.டி.ஓ., அலுவலகம் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ளது. இதேபோன்று, வாலாஜாபாத்தில் பழைய பேரூராட்சி அலுவலக கட்டடம் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்கள் ஆள் நடமாட்டம் இல்லாததாக இருள் சூழந்துள்ளது.
இவ்வாறான இடங்களை கண்டறிந்து, மது அருந்துதல், இரவு நேரங்களில் ஆண், பெண் ஜோடியாக வலம் வருவதும், வாடிக்கையாக உள்ளது. எனவே, வாலாஜாபாத்தில் கைவிடப்பட்ட கட்டட பகுதி இடங்களை கண்காணிப்பதோடு, இரவு நேரங்களில் போலீசார் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

