/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உயர்மட்ட பாலத்திற்கு கீழே தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
/
உயர்மட்ட பாலத்திற்கு கீழே தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
உயர்மட்ட பாலத்திற்கு கீழே தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
உயர்மட்ட பாலத்திற்கு கீழே தடுப்பு அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 01, 2024 11:58 PM

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலை போடும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக, தொடூர், சிறுவாக்கம், கோவிந்தவாடி பிரதான கிராமப்புற கடவுப்பாதைகள் மற்றும் கூத்தவாக்கம், கோவிந்தவாடி ஆகிய பல்வேறு கிராம ஏரிகளில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாவது கட்டமாக, சாலை போடும் பணிக்கு, ஆளுயரத்திற்கு மண்ணை கொட்டி நிரப்பும் பணி செய்து வருகின்றனர்.
குறிப்பாக, காஞ்சிபுரம் - பரந்துார் சாலை குறுக்கே, உயர்மட்ட பாலத்திற்கு ராட்சத பில்லர் துாக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும், இணைப்பு ஏற்படுத்தும் பணிக்கு, பாலத்திற்கு கீழே போதிய பாதுகாப்பு இல்லாமல் வேலைகள் நடந்து வருகின்றன.
இதனால், பரந்துார், ஏகனாபுரம், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு செல்லும் போது வாகன விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
எனவே, உயர்மட்ட பாலம் வேலை நடைபெறும் போது, பாலத்திற்கு கீழே தடுப்பு ஏற்படுத்திய பின், பணிகள் துவக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

