/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விவசாயிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஏப்.30 வரை நீட்டிப்பு
/
விவசாயிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஏப்.30 வரை நீட்டிப்பு
விவசாயிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஏப்.30 வரை நீட்டிப்பு
விவசாயிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஏப்.30 வரை நீட்டிப்பு
ADDED : ஏப் 22, 2025 12:25 AM
உத்திரமேரூர்,
உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக தங்களுடைய ஆதார் எண், மொபைல் போன் எண், நில உடைமை ஆவணங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்து வந்தனர்.
இதை தவிர்க்க, ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணியானது தற்போது நடந்து வருகிறது.
இது குறித்து உத்திரமேரூர் வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி கூறியதாவது:
உத்திரமேரூர் வட்டாரத்தில் 17,000 விவசாயிகள் உள்ளனர். இவர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற தங்களுடைய நில உடைமை ஆவணங்கள் மற்றும் பயிர் சாகுபடி அறிக்கை ஆகியவற்றை அவ்வப்போது ஆன்லைனில் சமர்ப்பித்து வருகின்றனர்.
இதை தவிர்க்க, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தனித்துவ அடையாள அட்டை எண் இருந்தால் மட்டுமே விவசாயிகள், 'பிரதான் மந்திரி கிசான்' திட்டத்தில் பயன் பெற முடியும்.
எந்தவித கட்டணமும் இன்றி, இந்த அட்டைக்கு விண்ணப்பிக்க ஏப்.15 வரை காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வரும் ஏப்.30ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் விரைந்து பதிவு செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.