/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் வரவேற்பு
/
வாக்காளர் பெயர் சேர்க்க விண்ணப்பம் வரவேற்பு
ADDED : பிப் 26, 2024 03:49 AM
காஞ்சிபுரம் : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற காரணங்களுக்காக, நவம்பர் 2023ல், சிறப்பு முகாம்கள் வாயிலாக, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து, பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஜன., 22ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும், இறுதி வாக்காளர் பட்டியலை, கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டிருந்தார். அதன்படி, 13.3 லட்சம் வாக்காளர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும். அதற்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை, வாக்காளர்கள் தொடர்ந்து விண்ணப்பங்களை அளிக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் கமிஷன் இணையதளத்திலோ அல்லது தாலுகா அலுவலகங்களிலோ விண்ணப்பங்களை அளிக்கலாம் எனவும், துணை பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

