/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மார் 22, 2025 12:38 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஏப்.,15ம் தேதி துவங்கும் பயிற்சிக்கு, ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பின்றி அனைத்து தரப்பினர் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
மார்ச் -24ம் தேதி முதல், 100 ரூபாய் விண்ணப்ப கட்டணமும், 18 ரூபாய் சேவை வரி கட்டணம் என, 118 ரூபாய் செலுத்தி விண்ணப்பத்தை பெற்று செல்லாம்.
பயிற்சி கட்டணமாக, 3,856 மற்றும், 694 சேவைக் கட்டணம் என, மொத்தம் 4,550 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில், 500 ரூபாய் மதிப்பில் நகைகளின் தரம் அறிய உதவும் உபகரணங்கள் வழங்கப்படும்.
நகை கடன், வட்டி கணக்கீடு செய்தல், ஹால் மார்க், நகை அடகு சட்டம், தரம், விலை மதிப்பீடு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பின், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் அண்ணா கூட்டுறவு மேலாண் பயிற்சி நிலையம் என்கிற முகவரி, 044 -27237699 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.