/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 10, 2025 07:51 PM
காஞ்சிபுரம்:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில், 'முதல்வரின் மாநில இளைஞர் விருது' ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினத்தில், 15 - 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுபவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.
'முதல்வரின் மாநில இளைஞர் விருது', வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும். இவ்விருதுக்கு 15 - 35 வயது வரையுள்ள, ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். விருதுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்கான தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்பட கூடியதாகவும், அளவிட கூடியதாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க, ஏப்ரல் 31ம் தேதி கடைசி நாளாகும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான, www.sdat.tn.gov.inல், ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03481 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.