/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு
/
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பம் வரவேற்பு
ADDED : நவ 20, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு, தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறுவோருக்கு, 5.80 லட்ச ரூபாய் விருது தொகையும், 2025ம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று விருதும் வழங்கப்படும்.
விருது பெற விரும்புவோர் www.tn.gob.in/ta/forms/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.25க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.