ADDED : ஜூலை 16, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பாளருக்கு களப்பணி மற்றும் ஒரு பி.டி.ஓ.,விற்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தானுராஜ், வாலாஜாபாத் பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, குன்றத்துார் வட்டார நிர்வாகத்தை நிர்வகித்து வந்த கண்ணன், அதே ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகள் நிர்வாகிக்கும் பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.