/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்நடை கணக்கெடுப்புக்கு 766 பணியாளர்கள் நியமனம்
/
கால்நடை கணக்கெடுப்புக்கு 766 பணியாளர்கள் நியமனம்
ADDED : செப் 18, 2024 10:22 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், 106 கால்நடை மருந்தகங்கள், 38 கிளை நிலையங்கள், மூன்று தலைமை மருத்துவமனை, ஒரு நடமாடும் கால்நடை மருந்தகம் என, 148 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.
இதில், 20வது கால்நடைகள் கணக்கெடுப்பு படி, 19,652 எருமை மாடுகள், 1.68 லட்சம் கறவை மாடுகள், பன்றிகள், செம்மறியாடுகள், வெள்ளாடுகள், நாய்கள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் என மொத்தம், 4.10 லட்சம் கால்நடைகள் உள்ளன.
தற்போது, 21வது கால்நடை கணக்கெடுப்பு நடத்த உள்ளன. இந்த கால்நடை கணக்கெடுப்பு துவங்கும் நாளில் இருந்து, நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என, கால்நடை துறை அறிவுரை வழங்கி உள்ளது.
குறிப்பாக, கால்நடை துறைச் சேர்ந்த உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர் ஆகியோர் கணக்கெடுக்க உள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 105 பணியாளர்கள், 23 மேற்பார்வையாளர்கள். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 160 பணியாளர்கள், 34 மேற்பார்வையாளர்கள். சென்னை மாவட்டத்திற்கு, 385 பணியாளர்கள், 59 மேற்பார்வையாளர்கள் என, மொத்தம், 766 பணியாளர்கள் மூலமாக கால்நடை கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
ஒவ்வொரு கால்நடை கணக்கெடுப்பாளர் குறைந்தபட்சம், 3,000 எண்ணக்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும். தினசரி, 33 வீடுகள் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என, வழிகாட்டில் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.