/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடத்தில் வரும் 31ல் தொழிற் பழகுனர் முகாம்
/
ஒரகடத்தில் வரும் 31ல் தொழிற் பழகுனர் முகாம்
ADDED : ஜன 23, 2025 07:28 PM
காஞ்சிபுரம்:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பயிற்சி பிரிவின் கீழ், சென்னை மண்டல அளவிலான தொழிற் பழகுனர் ஆள்சேர்க்கை முகாம், வரும் 31ம் தேதி காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை ஒரகடம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில், மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்று, தொழிற் பழகுனர் பயிற்சிக்கு, 1,500க்கும் மேற்பட்ட இடங்களை பூர்த்தி செய்ய உள்ளனர்.
எனவே, அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், கல்வி பயின்ற பயிற்சியாளர்கள் தொழிற் பழகுனர்களாக பயிற்சியில் இணைந்து, ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி பெற்று, மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகையாக 8,050 முதல் 16,000 ரூபாய் வரை, மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளில் இருந்து வழங்கப்படுகிறது.
சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் சலுகையும் உள்ளது. எனவே, மாணவ - மாணவியர் இம்முகாமில் கல்வி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.

