/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரவுபதியம்மன் கோவிலில் நாளை அர்ச்சுனன் தபசு
/
திரவுபதியம்மன் கோவிலில் நாளை அர்ச்சுனன் தபசு
ADDED : மே 10, 2025 07:04 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் செவிலிமேடில் உள்ள திரவுபதியம்மன் உடனுறை தருமராஜர் கோவிலில், அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி தினமும் மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி, திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கூட்ரோடு கோவிந்தராஜ், மஹாபாரத சொற்பொழிவாற்றுகிறார். இதில் திருவடிராயபுரம் முனுசாமி இசை வாசிக்கிறார்.
விழாவின் மற்றொரு நிகழ்வாக கடந்த 8ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரத நாடகம் நடந்து வருகிறது.
நேற்று, ராஜசுய யாகம் என்ற தலைப்பில் மஹாபாரத நாடகம் நடந்தது. இன்று பகடை துயில் என்ற தலைப்பில் நாடகம் நடக்கிறது.
முக்கிய நிகழ்வான அர்ச்சுனன் வேடமிட்ட நாடக கலைஞர் தபசு மரத்தில் ஏறி, தவம் செய்யும் நிகழ்ச்சி நாளை காலை நடைபெறுகிறது.
வரும் 18ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடக்கிறது.