/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பிப்., 5 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
/
காஞ்சியில் பிப்., 5 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
காஞ்சியில் பிப்., 5 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
காஞ்சியில் பிப்., 5 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
ADDED : ஜன 14, 2025 12:22 AM
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பிப்., 5 முதல் 15ம் தேதி வரை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன், சிப்பாய் பார்மசி மற்றும் சோல்ஜர் டெக்னிக்கல் நர்சிங் அசிஸ்டென்ட், நர்சிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு, ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து, விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதி அடிப்படையில் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nicல்பதிவேற்றியபடி, அனைத்து ஆவணங்களை யும் கொண்டு வருவது கட்டாயம்.
சந்தேகம், உதவி போன்றவற்றுக்கு, விண்ணப்பதாரர்கள், 044- - 2567 4924 என்ற எண்ணில், சென்னையின் ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஆட்சேர்ப்பு செயல்முறை, முற்றிலும் நியாயமான மற்றும் வெளிப்படையானது.
விளம்பரதாரர்கள், முகவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அதுபோன்ற முகவர்களை நாட வேண்டாம் என, கேட்டுக் கொள்ளப்படுகிறது.