/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்மருவத்துாரில் இருமுடி விழா ஒப்பந்த பேருந்து வழங்க ஏற்பாடு
/
மேல்மருவத்துாரில் இருமுடி விழா ஒப்பந்த பேருந்து வழங்க ஏற்பாடு
மேல்மருவத்துாரில் இருமுடி விழா ஒப்பந்த பேருந்து வழங்க ஏற்பாடு
மேல்மருவத்துாரில் இருமுடி விழா ஒப்பந்த பேருந்து வழங்க ஏற்பாடு
ADDED : டிச 26, 2024 09:12 PM
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிச., 15ல் துவங்கிய இருமுடி விழா பிப்., 10ம் தேதி வரை நடக்கிறது.
விழாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்ளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இருமுடி விழாவிற்கு மேல்மருவத்துாருக்கு குழுவாக செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், ஒரு நாள் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருமுடி விழாவிற்கு குழுவாக செல்லும் பக்தர்கள், பேருந்து ஒப்பந்த அடிப்படையில் தங்களது ஊரில் இருந்து மேல்மருவத்துாருக்கு பயணிக்கலாம். ஒப்பந்த பேருந்து தேவைப்படுவோர் 94450 21353, 63814 77304 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அரசு போக்குவரத்து கழக காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.