/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
/
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
ADDED : மார் 31, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது.
இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உத்சவம் நடந்தது. இதில், உத்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி, ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டை பருவதராஜகுல மீனவ சமுதாயத்தினர் செய்திருந்தனர்.