/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மனுநீதி நாள் முகாமில் ரூ.4.88 கோடியில் உதவி
/
மனுநீதி நாள் முகாமில் ரூ.4.88 கோடியில் உதவி
ADDED : பிப் 13, 2025 12:37 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, குண்ணவாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட மலையாங்குளம் கிராமத்தில், மனு நீதி நாள் முகாம், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.
அதில், வருவாய் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட 16 துறைகளின் கீழ், 236 பயனாளிகளுக்கு 4.88 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மற்றும் எம்.எல்.ஏ., சுந்தர் வழங்கினர்.
பின், பொதுமக்களிடமிருந்து 51 மனுக்கள் பெறப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர், அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். தாசில்தார் தேன்மொழி, மலையாங்குளம் ஊராட்சி தலைவர் ஜெயகாந்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.

