/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுார் அருகே கொடூரம் ------ தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை
/
ஸ்ரீபெரும்புதுார் அருகே கொடூரம் ------ தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை
ஸ்ரீபெரும்புதுார் அருகே கொடூரம் ------ தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை
ஸ்ரீபெரும்புதுார் அருகே கொடூரம் ------ தலையில் கல்லை போட்டு இளம்பெண் கொலை
ADDED : ஏப் 03, 2025 02:02 AM

ஸ்ரீபெரும்புதுார்:நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தலையில் கல்லைப் போட்டு, இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், கொளத்துாரைச் சேர்ந்தவர் புஷ்பா, 65. இவரது மகள் விக்னேஷ்வரி, 24. வெங்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
இவர், புதுக்கோட்டையை சேர்ந்த தீபன், 27, என்பவரை, 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிவாகி, நாளை நிச்சயத்தார்த்தம் நடக்க இருந்தது.
இதற்காக, விக்னேஸ்வரி, தீபன் இருவரும் இரு தினங்களுக்கு முன் புத்தாடை வாங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தாயுடன் சண்டை போட்ட விக்னேஷ்வரி, 'நான் வெளியில் போய் திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, ஸ்கூட்டரில் சென்றவர், இரவில் வீடு திரும்பவில்லை.
நேற்று, காலை 7:00 மணிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர், கொளத்துார் மயானம் பகுதிக்கு சென்றபோது, தலையில் காயங்களுடன் விக்னேஸ்வரி இறந்து கிடந்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.
அப்பெண் எதற்காக மயானத்திற்கு சென்றார்; கொலை செய்தது யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர். குடும்பதாரிடமும் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள காதலன் தீபக்கை போலீசார் தேடி வருகின்றனர்.

