/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடுக்குமாடி கழிவுநீர் ஏரியில் கலப்பு சாலையை வெட்டி அட்டகாசம்
/
அடுக்குமாடி கழிவுநீர் ஏரியில் கலப்பு சாலையை வெட்டி அட்டகாசம்
அடுக்குமாடி கழிவுநீர் ஏரியில் கலப்பு சாலையை வெட்டி அட்டகாசம்
அடுக்குமாடி கழிவுநீர் ஏரியில் கலப்பு சாலையை வெட்டி அட்டகாசம்
ADDED : பிப் 08, 2025 11:28 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பால்நல்லுார் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் 300 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது.
இந்த ஏரி நீர், அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில், பால்நல்லுார் ஊராட்சியில், வல்லம் - வடகால் சிப்காட் தொழில் பூங்காவிற்கு உட்பட்டு ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தொழிற்சாலையில் பணிப்புரியும் 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பால்நல்லுாரில் வாடகைக்கு தங்கி பணிப்புரிந்து வருகின்றனர்.
இதற்காக, அப்பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி, தொழிலாளர்களுக்கு வாடகை விட்டு, வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக அருகில் உள்ள ஏரியில் கலக்க விடுகின்றனர்.
ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையை வெட்டி, சிமென்ட் குழாய் பதித்து மறுப்புறம் உள்ள ஏரியில் கழிவுநீர் கலக்கிறது. இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.
தண்ணீர் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர, கழிவுநீர் கலந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் பாதிப்படைந்து வருகின்றன.
அதே போல், சாலையை வெட்டி கழிவுநீர் கடக்க சிமென்ட் குழாய் பதிப்பதால், சேதமடைந்த சாலை செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, ஏரியில் கழிவுநீர் விடுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டம் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.